எங்கப்பா வயசிருக்குமா இந்த டோண்டுவுக்கு. எங்கப்பாவை எப்பவும் கேக்கறது மாதிரியே இவரையும் கேக்கணும்னு தோணுது: "ஏப்பா லூசா நீயி?"
ஞாநின்னு ஒருத்தர் நல்லாத்தான் எழுதுவாரு. எழுதுறாரு. என்ன, ப்ரீலான்சா எழுதுனப்ப இருந்த சூடு இப்ப ஆவிகிட்ட சம்பளம் வாங்குறப்ப இல்ல. எப்படி இருக்கும்ங்கிறேன்? உங்களுக்கு இருக்குமா? எனக்கு இருக்குமா? அவரும் மனுசந்தானேய்யா? அவரும் குழந்தை குட்டியோட செத்த சவுரியமா இருக்கட்டுமே.
அந்த ஆளு கலைஞரைப் பத்தி எழுதுனதைப் படிச்சா இங்க சில திராவிட அரைவேக்காடுங்க தாம்தூம்னு குதிக்கற அளவுக்கு திருவாத்தானுக்கு ஒண்ணும் உறைக்க மாட்டேங்குது. இத்தனைக்கும் கலைஞரைத் தவிர ஒரு பயலுக்கும் திருவாத்தான் இன்னிக்கு வரைக்கும் ஓட்டு போட்டதில்லை. என்ன சொல்லிட்டாரு ஞாநி? வயசாளி, கஷ்டப்படுறது கண்கூடாத் தெரியுது, கொஞ்சம் ஓய்வெடுத்துக்குங்க ன்னு சொன்னாத் தப்பா? பெரியார் 95வயசிலேயும் அலைஞ்சாரு ன்னு ஒரே உதாரணத்தை ஒம்போது பேர் எழுதறாய்ங்க. அவரு ஒண்ணும் அரசாங்கம் நடத்திலயே, கட்சி, அதிலும் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சி கூட இல்லையே, ஒரு மக்கள் இயக்கம்ல நடத்துனாரு. இப்பக்கூட ஞாநி சொல்றது என்ன, முதியோர் இல்லத்துக்கா போகச் சொல்றாரு, முதல்வர் பதவிலிருந்து ஓய்வெடுத்துக்குங்க ங்கறாரு. இதைப் புரிஞ்சிக்காம இங்க ஒரு கூட்டமே குதிக்குது. சரி, நாளைக்கு தலைவர் காலமாயிட்டா இதுகள்ளாம் கூடவே போயிருங்களா? அடே! சும்மா ஓவரா பிலிம் காட்டாதீங்கப்பா...
அடச்சே, தலைப்பை விட்டுட்டேன் பாத்தீங்களா? இந்த டோண்டு ஒரு பதிவு எழுதுனாரே, கலைஞர் எம்ஜியாரைச் சொல்லலையா, ஞாநி இவரைச் சொன்னா மட்டும் தப்பான்னு. பெருசு, உங்களுக்கு ஏன் இப்படி வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கிற வேலை? கலைஞரும் எம்ஜியாரும் நேருக்கு நேர் நின்னவுங்க. கலைஞரும் ஞாநியும் அப்படியா? கலைஞர் எதிரே இவர் நிக்கமுடியுமா? இல்ல ஞாநி என்ன எதிர்கட்சித் தலைவரா? நீரும் உம்ம உதாரணமும்! ஒரு பொறுப்புள்ள பத்திரிகைக்காரர், தமிழ்நாட்டு வாக்காளர்னு பாத்தா, ஞாநிக்கு அவர் சொன்னதைச் சொல்ல உரிமை இருக்கு, அதுக்காக அவரை பாப்பான் அது இதுன்னு எழுதுறவங்க கொஞ்சம் அடங்குங்க. உங்க பிலிமை கலைஞரே ரசிக்கமாட்டார். எங்க இங்கிலாந்தூர் பக்கம் ஒரு சொலவடை உண்டு, 'more loyal than the king' அப்படின்னு, அதுமாதிரி வேசம் கட்டாதீங்க.
திருவாத்தான் சொல்றதெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க, அவனே நாளைக்கு மாத்தி சொல்வான், அதனாலதான் அவன் திருவாத்தான்!
Sunday, 7 October 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment