Sunday, 7 October 2007

இணையப் பெருசுங்கல்லாம் எங்கே?

ரெண்டு வருசமா நானும் தமிழ்மணத்த மேயுறேன், (இப்பக்கூட லெப்ட் சைடுல பழைய பதிவெல்லாம் வருது) ரெண்டு வருசம் முந்தி எத்தன பேரு விதவிதமா எழுதுனாங்க. இப்ப அவங்கள்ளாம் எங்கே? அப்பப்ப கமெண்டு போடறாங்க, நாங்களும் இங்கனதான் இருக்கோம் ங்கிறதைக் காட்டிக்கிறாங்களா? அப்படின்னா ஏன் எழுத மாட்றாங்க? புதுசா வந்தவுகளைப் பாத்துப் பயந்து போயிட்டீங்களா பெருசுங்களா? அவதூறு கிளப்பி ஓடிப் போன ஆரியக் கோஷ்டிகளை உடுங்க, மத்த நடுநிலை வாதிங்க, திராவிட ஆய்வாளிங்க, மக்கள் போராளிங்க எல்லாருமே ஒரு மாதிரி மப்ப்பில தான் இருக்கீங்க போல இருக்கு. மப்புன்னதும் இன்னிக்கு ஞாயித்துக் கிழம வேற மத்தியானம் சிக்கனுக்கு தோதா கொஞ்சம் இறக்கிக்கிட்டு ஒரு தூக்கம் போடணும். வர்ட்டா?

(தமிழ்மணத்தில் சேரணும்னா 3 போஸ்ட் போட்டிருக்கணுமாமே, அதான் இந்த ஜல்லி, கண்டுக்காதீங்க)

No comments: