Sunday, 7 October 2007
வணக்க்க்க்க்கம்
எல்லா சனங்களுக்கும் வணக்கம். எங்க மாமனுக எனக்கு திருவாத்தான்னு நக்கலா பேரு வெச்சப்ப எனக்கு கடுப்பாத் தான் இருந்துச்சு. ஆனா இன்னிக்கு எனக்கும் வலைப்பூ எழுத ஆசை வந்தப்ப அந்தப் பேரே எனக்கு வெச்சிக்கலாம்னு யோசனை எப்பிடி வந்ததுன்னு எனக்கே புரியலியே. ஒரே வார்த்தை அடுத்தவன் கூப்பிட்டா வசவாயும், தானே கூப்பிட்டா சிறப்பான புனை பெயராயும் எப்பிடி எடுத்துக்க முடியுது? எல்லாம் இந்த மனுசப் பயலோட ஈகோதான் காரணம். நான் என் மூஞ்சியைக் காட்டிக்காத வரைக்கும் எனக்கு இந்தப் பேரு சீனியாத்தான் இனிக்கும். என்னிக்காச்சும் பதிவர் பட்றையில் என்னியப் பாத்தா திருவாத்தான்னு மட்டும் கூப்பிட்டா எனக்கு வர்ற கோபத்தில செவுட்டு மேல ரெண்டு குடுத்தாலும் குடுப்பேன்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment